Friday, September 17, 2010

VANITHA-வனிதா 12

போன் பேசிவிட்டு வனிதா தன்னை   நோக்கி வருவதை பார்த்ததும் அங்கித் சற்று நிமிர்ந்த படி அவள் முகத்தை பார்த்து  "போலாமா ?" என கேட்க "யா" என்றபடி அவனுடன் சேர்ந்து நடந்த படி ஹோட்டல் வாசலுக்கு இருவரும் வந்தனர்.அங்கே அவர்களுக்காக அனுப்ப பட்டிருந்த கார் நின்று கொண்டிருந்தது.இருவரும் அதில் ஏறி மீட்டிங்    நடக்கும் ஹோட்டல் நோக்கி பயணம் செய்ய ஆரம்பித்தனர்.வழியில் இருவரும் பொது விஷயங்கள் பற்றி பேசியபடி சென்று கொண்டிருந்தனர்.அங்கித் அவவவ் வனிதா அறியாத படி அவள் அழகை ரசித்து கொண்டிருந்தான். 
       அரை மணி நேர பயணதிற்கு பின் கார் மீட்டிங் நடக்கும் ஹோட்டல்ஐ சென்று அடைந்தது.அந்த ஹோட்டல் இவர்கள்  தங்கி இருக்கும் ஹோட்டல் போல் இல்லாமல் ஒரு ரேசொர்ட் போல இருந்தது.ஹோட்டல் கேட் முதல் ரிசெப்சன் வரை செடிகளாக பசுமையாய் இருந்தது.உள்ளே சென்றதும் ரிசெப்சன்இல் இருந்த ஆணிடம் இவர்கள் மீட்டிங் பற்றி கேட்க அவனும் அவர்கள் மீட்டிங் நடக்கும் இடத்திற்கு செலும் வழியை கூறினான்.
         வனிதாவும் அங்கித்தும் ஹோட்டல் பின் பக்கம் மீட்டிங் நடக்கும் இடத்தை சென்றடைந்தனர்.அங்கே ஒரு நீச்சல் குளத்தை தாண்டி இவர்கள் கம்பெனிஇல் மற்ற பிராஞ்சஇல் வேலை செய்பவர்கள் அதிகம் பேர் கூடி இருந்தனர்.
                           இவர்கள் அங்கே சென்றதும் கோட் அணிந்த ஒரு ஒருவன் இவர்களை நெருங்கி "மே ஐ know  யுவர் நேம் சார் ?"
என கேட்க இவர்கள் பெயரை சொன்னதும் இவர்களுக்கு ஒதுக்க பட்டிருந்த டேபிலுக்கு கூட்டி சென்று உட்கார வைத்தான்.இருவரும் உட்கார்ந்ததும் ஒரு சர்வர் இவர்களை நெருங்கி "வாட் டூ யு லைக் டு ஹேவ்?"
என பணிவுடன் கேட்க,இவர்கள் டீ சொன்னதும்,"டூ மினுட்ஸ்" என்றபடி புன்நகைத்து விட்டு சென்றான். சிறிது நேரத்தில்  டீ வந்துவிட இருவரும் பேசியபடி குடிக்க ஆரம்பித்தனர்.
     அப்பொழுது வனிதா போன் சிணுங்க,"ஹலோ..........இப்பதான் போன்   பண்ணனும்னு தோன்னிச்சாகும்?..........ஒ அப்படியா?சாரிங்க!!!. ஹேன்டு   பேக்ல போடறப்ப எப்படியோ தெரியாம ஆப் ஆகிருக்கு அதான்.......ஐ டூ மிஸ் யு......",என பேசி கொண்டிருக்க,போனில் அவள் கணவன் என்பதை புரிந்து கொண்டு அங்கித் தன் பார்வையை தன்னை சுற்றி நோட்டம்  விட விட்டான்.இவர்களை சுற்றி பலர் டீ,காபி, ட்ரிங்க்ஸ் என குடித்து  கொண்டிருப்பதை பார்த்து கொண்டிருக்கையில்,வனிதா "ஹலோ!!!ஹலோ!!!ஹலோ!!என கத்த,அவள் பக்கம் திரும்பினான்.'என்ன  ஆச்சி' என்பது போல இவளை பார்க்க,"அவர் செல்ல சார்ஜ் இல்ல போல.கட் ஆகிருச்சி"என சோகமாக சொல்ல அவள் தன் குடும்பத்தை பிரிந்திருப்பது அவளுக்கு அதிக கஷ்டதை அளிப்பதை  அன்கிதால் உணரமுடிந்தது.  
        சிறிது நேரத்தில் இருவரும் டீஐ குடித்து விட்டு பேசி கொண்டிருக்கையில் கோட் அணிந்த ஒருவர் அனைவரின் முன்னும் நின்று கொண்டு பேச ஆரம்பித்தார்.

No comments:

Post a Comment